சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 6,709 கோவிட் -19 தொற்றுகள் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 7,000க்கும் குறைவாக 98 நாட்களுக்கு முன்பு ஜூலை 5ஆம் தேதி 6,387 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஒரு அறிக்கையில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா 10,833 மீட்பு இருப்பதாகக் கூறினார். குணமடைந்தோர்களின் மொத்த எண்ணிக்கை 2,206,502 ஆக உள்ளது. அதே வேளை மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,346,303 ஆக உள்ளது என்று நூர் ஹிஷாம் கூறினார்.
தீவிர சிகிச்சையில் 762 நோயாளிகள் இருக்கின்றனர். அவர்களில் 702 பேர் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் மற்றும் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டது.
இதற்கிடையில் 398 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது. 298 நோயாளிகளுக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் மீதமுள்ள 100 பேருக்கு தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இன்று 6,703 உள்ளூர் நோய்த்தொற்றுகள் இருந்தன. இதில் 6,454 மலேசியர்கள் மற்றும் 249 வெளிநாட்டவர்கள் உள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட ஆறு தொற்றுகள் இருந்தன. புதிய நோய்த்தொற்றுகளில், 2.1% மட்டுமே வகை 3, 4 மற்றும் 5 வழக்குகள் என்று நூர் ஹிஷாம் கூறினார்.