ஜார்ஜ்டவுன்: இன்று (அக். 12) அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், மலையில் உள்ள கேக் லோக் சி கோவிலின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்தது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.56 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை இன்று ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
“தகவல் கிடைக்கப் பெற்றதும் பயா தெருபோங் மற்றும் ஜாலான் பேராக் நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீ மலையில் சுமார் 12 மீட்டர் முதல் 15 மீட்டர் அளவுள்ள ஒரு கோவில் தீப்பற்றி எரிந்தது.”
“தீப்பரவல் ஏற்பட்ட கோவிலின் 70 விழுக்காடு சேதமடைந்தது” என்று தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்த விபத்தில் காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






















