கோவிட் -19 குறிகாட்டிகளின் நேர்மறையான வளர்ச்சியைத் தொடர்ந்து கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படாமல் குறிப்பிட்ட நாடுகளிலிருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட வெளிநாட்டவர்களை மலேசியாவுக்குள் அனுமதிப்பதன் மூலம் நாட்டின் எல்லையை திறக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
தேசிய மீட்பு கவுன்சிலின் (MPN) தலைவர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் தடுப்பூசி சான்றிதழ் திட்டத்தின் பரஸ்பர அங்கீகாரத்தின் மூலம் இது பல நாடுகளில் செயல்படுத்தப்பட்டது போல் மேற்கொள்ளப்படும் என்றார். இன்று எம்பிஎன் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று என்றார்.
நாட்டின் எல்லைகளைத் திறக்கும் செயல்பாட்டில் இது ஒரு நேர்மறையான வளர்ச்சியாகும். இது பொருளாதார நடவடிக்கைகளை, குறிப்பாக சுற்றுலாத் துறை, அனைத்துலக மாநாடுகள், சில்லறை விற்பனை மற்றும் பிறவற்றை புதுப்பிக்கும்.
முஹிடின் தனக்கு சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீனால் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக தினசரி கோவிட் -19 தொற்றின் வீழ்ச்சி, கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தீவிர சிகிச்சை பிரிவு வார்டு படுக்கைகள் மற்றும் உயர் தடுப்பூசி ஆகியவற்றில் திருப்தி அடைந்ததாகவும் கூறினார்.