கோலாலம்பூர்: தடுப்பூசி எதிர்ப்பு குழுக்களை அதன் பிரதிநிதிகளை சந்தித்து கோவிட் -19 தடுப்பூசி குறித்து விளக்கம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சுகாதார அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி-பதில் அமர்வின் போது துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நூர் ஆஸ்மி கஜாலி இது பற்றிக் கூறுகையில், இது போன்ற சந்திப்புக்கள் மூலம் தடுப்பூசி எதிர்ப்பாளர்களுக்கு அவர்களின் தரப்பு வாதங்களை எதிர்கொள்வதற்கு நாம் ஆய்வுகளின் அடிப்படையில் சரியான விளக்கங்களை வழங்க முடியும் என்று கூறினார்.
“தடுப்பூசி எதிர்ப்பு குழுக்கள் தடுப்பூசியின் பயன்பாடு பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன். அவர்கள் எங்களை எப்படி சந்திக்க முடியும்? , அவ்வாறு சந்தித்தால் எங்கள் நிபுணர்கள் அவர்களுக்கு தடுப்பூசி பற்றிய விளக்கங்களை அளிக்க முடியும். நாங்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் . எங்களை சந்திக்க வாருங்கள்” என்று கூறினார்.
“நாங்கள் கோவிட் -19 எதிரான தடுப்பூசி தொடர்பில் கொள்கைகளை உருவாக்கவில்லை. பூஸ்டர் டோஸில் செய்யப்பட்ட ஆய்வுகள் உட்பட, அவை முழுமையான அளவைப் பெற்ற தனிநபர்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டவை” என்று செனட்டர் டாக்டர் வான் மார்டினா வான் யூசோப்பின் கேள்விக்கு துணை அமைச்சர் பதிலளித்தார்.
டாக்டர் நூர் ஆஸ்மி தொடர்ந்து பேசுகையில், கோவிட் -19 தடுப்பூசியின் செயல்பாடு குணமடைய அல்ல, மாறாக அது வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதாகும் என்றார்.






















