சீனாவின் பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து மாரத்தான் போட்டிகள் இடை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹானிலிருந்து பரவிய கொரோனா உலக நாடுகளை உலுக்கி வருகிறது, இந்நிலையில் கொரோனா பரவலை வெற்றிகரமாக சீனா கட்டுப்படுத்தியதாக கூறினாலும் தற்போது மீண்டும் கோவிட் -19 பரவல் அதிகரித்து வருவதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக பெய்ஜிங்கில் புதிதாக 39 பேர் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனைத் தொடர்ந்து பெய்ஜிங்கில் நடைபெறவிருந்த மாரத்தான் போட்டிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
தொற்றை கட்டுப்படுத்தும் முனைப்பில் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவே இம் மாரத்தான் போட்டி இடை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெகு சீக்கிரமாக நகரத்தில் பூஜ்ய கோவிட் பாதிப்பு என்ற நிலையை நாம் எட்டுவோம் என்றும் இந்த புதிய தொற்றுப் பாதிப்பு சுற்றுலாப் பயணிகளால் பரவியிருக்கக் கூடும்” என்றும் சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.