தன் நாட்டுக் குடிமக்களுக்கான அனைத்துலக பயணத் தடையை நீக்குகிறது ஆஸ்திரேலியா

சிட்னி, அக்டோபர் 27 :

அனுமதியின்றி ஆஸ்திரேலியக் குடிமக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான தடையை ஆஸ்திரேலியா நீக்குகிறது என்று அரசாங்கம் புதன்கிழமை (அக்டோபர் 27) அறிவித்தது, நாட்டின் எல்லை இந்த ஆண்டு இறுதிக்குள் திறமையான தொழிலாளர்கள் மற்றும் அனைத்துலக மாணவர்களுக்காக திறக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் கரேன் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா தனது அனைத்துலக எல்லைகளை 18 மாதங்களுக்கும் மேலாக மூடியுள்ள நிலையில் , முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடிமக்கள் இனி நாட்டை விட்டு வெளியேற விலக்கு பெற வேண்டியதில்லை என்று சுகாதார மற்றும் உள்துறை அமைச்சகங்களின் கூட்டு அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவிலுள்ள பெரியவர்களுக்கான தடுப்பூசி விகிதம் 80 விழுக்காடு இலக்கை நெருங்கியதால் இந்த தடையை அரசாங்கம் நீக்குகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது, நாட்டில் தடுப்பூசி விகிதங்கள் அதிகரித்துள்ளதால், ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் அதே வேளையில்,குடிமக்கள் அல்லாத சிலர் உட்பட – அதிக பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று உள்துறை அமைச்சர் கரேன் ஆண்ட்ரூஸ் கூறினார்.

“இந்த ஆண்டு இறுதிக்குள், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட திறமையான தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களை வரவேற்போம் என்று எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில் மாற்றங்களை முன்னறிவித்த பிரதமர் ஸ்காட் மோரிசன், சிங்கப்பூருடன் ஒரு பரஸ்பர பயணக் குமிழியை அறிவிப்பதற்கு ஆஸ்திரேலியா இப்போது “மிக நெருக்கமாக” இருப்பதாகக் கூறினார்,நேற்று சிங்கப்பூருக்கு வரும் ஆஸ்திரேலியர்கள் வருகையில் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என்று சிங்கப்பூர் அறிவித்ததது குறிப்பிடத்தக்கது.

நகர-மாநிலத்திற்கான குவாண்டாஸ் விமான சேவை நவம்பர் 22 ஆம் தேதி அன்று மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

“நாங்கள் ஒரு கால அட்டவணையை உருவாக்கி வருகிறோம், இது விசா வைத்திருப்பவர்கள் – ஆஸ்திரேலியர்கள் திரும்புவது அல்லது சிங்கப்பூருக்குச் செல்வது மற்றும் இரு தடுப்பூசி போடப்பட்டவர்கள் திரும்புவது – ஆஸ்திரேலியாவுக்கு வருவது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று மோரிசன் சேனல் 7 தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி, கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்தும் விதமாக ஆஸ்திரேலியா மிகக் கடினமான எல்லைக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது.

ஏறக்குறைய 600 நாட்களுக்கு பிறகு , சர்வதேச விமானங்கள் அங்கு தரையிறக்கப்பட்டுள்ளன.

நாடு திரும்பும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தலை சிட்னி ரத்து செய்திருந்தாலும், குறைந்த தடுப்பூசி விகிதங்களைக் கொண்ட பிற ஆஸ்திரேலிய மாநிலங்களில் இன்னும் 14 நாள் ஹோட்டல் தனிமைப்படுத்தல் தேவைகள் கட்டாயம் என்பதும் அவற்றின் செலவும் மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

—ஏ.எஃப்.பி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here