நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யாவின் “HOOTE” செயலி அறிமுகம்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ஆம்டெக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஹூட் (HOOTE) என்ற பெயரில் ஆடியோவுக்கான சமூக வலைதள செயலியை அறிமுகம் செய்துள்ளார்.

“இதனை (HOOTE) அறிமுகம் செய்து வைத்துள்ள நடிகர் ரஜினிகாந்த், குரலை அடிப்படையாகக் கொண்ட சமூகவலைத்தளத்தில் இந்தியாவிலிருந்து உலக மக்களுக்காக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி” என தனது டுவீட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயலி மூலம், 60 விநாடிகள் கொண்ட ஆடியோவை பதிவேற்றலாம், மேலும் நமக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து அந்த ஆடியோவை கேட்க முடியும்.

அத்தோடு, ஆடியோவுடன் புகைப்படம் இணைத்துக் கொள்ளும் வசதியும் இதில் இருக்கிறது, சுமார் 15 இந்திய மொழிகளில் HOOTE அறிமுகம் கண்டுள்ளது சிறப்பான அம்சமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here