ஆப்கானிஸ்தானில் சிறுமிகளை வயதானவர்களுக்கு விற்பனை செய்யும் அவலம்

ஆப்கானிஸ்தானில் வறுமை காரணமாக அங்குள்ள பெற்றோர்கள் தங்களது சிறுமிகளை வயதானவர்களுக்கு விற்பனை செய்து வரும் அவலம் அரங்கேறி வருகிறது.

தலிபான்கள் அரசு கடும் பொருளாதார நெருக்கடியால் விழி பிதுங்கி வரும் நிலையில், அவர்களின் கொடுங்கோல் ஆட்சியில் சிக்காமல் இருக்க, அந்நாட்டு மக்கள் ஆயிரக்கணக்கானோர் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் வெளியேறி வருகின்றனர். ஆனால், பொருளாதார வசதி, ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் ஏழை, எளிய மக்கள் அன்றாடம் பிழைப்புக்கு அல்லல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், குடும்ப வறுமையை போக்க ஆப்கானிஸ்தான் குடும்பங்கள் சிறுமிகளை விற்கும் அவலம் அரங்கேறி வருகிறது. பர்வானா மாலிக் என்ற 9 வயது சிறுமி, சொந்த குடும்பத்தினரால் 55 வயது முதியவருக்கு விற்கப்பட்டுள்ளது தற்போது சர்வதேச பத்திரிகைகள் மூலம் ஊடக வெளிச்சம் பெற்றுள்ளது. 8 பேர் கொண்ட பர்வானா மாலிக்கின் குடும்பம் வறுமையால் நாளும் போராடி வந்த நிலையில் அச்சிறுமியை வறுமை காரணமாகவே விற்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேபோல், அப்துல் மாலிக் தமது 12 வயது மகளை சில மாதங்கள் முன்னர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். தொடர்ந்து, பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது தமது 9 வயது மகளையும் விற்பனை செய்யும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அச்சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here