பி.கே.ஆர் துணைத் தலைவர் முஹமட் ரபிசி ரம்லியை அவமதித்த குற்றச்சாட்டில் இருந்து ஆடவர் விடுவிக்கப்பட்டார்

கோத்தா கினாபாலு, நவம்பர் 5 :

பி.கே.ஆர். துணைத் தலைவர் முஹமட் ரபிசி ரம்லியின் கண்ணியத்தை 2018ஆம் ஆண்டு அவமதித்த குற்றச்சாட்டில் இருந்து, சிலாங்கூரைச் சேர்ந்த நபர் ஒருவரை செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விடுவித்தது.

டேயிங் முஹமட் ரிடுவான் பச்சோக், 37, என்ற அந்த ஆடவர் எந்த உத்தரவுமின்றி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மார்லினா இப்ராஹிம், டேயிங்கிற்கு எதிராக முதன்மையான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்று தீர்ப்பளித்த பிறகு அவரை அந்த வழக்கிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டார்.

நவம்பர் 3, 2018 அன்று மாலை 4 மணிக்கு கெனிங்காவிலுள்ள கம்போங் மெராம்பாங்கில் உள்ள ஒரு சமூக மையத்தில் 44 வயதான ரஃபிசியின் அடக்கத்தை அவமதிக்கும் நோக்கில் டேயிங் வார்த்தைகளை பயன்படுத்திப் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 509 இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஐந்தாண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க இந்தப் பிரிவு வழிசெய்கிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி விசாரணை தொடங்கியதில் இருந்து, எட்டு அரசு தரப்பு சாட்சிகள் டேயிங்கிற்கு எதிராக சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டனர். இருந்தும் அவருக்கு எதிரான குற்றம் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை.

வழக்கறிஞர் அம்லி நோஹின் டேயிங்கின் தரப்பில் ஆஜரானார். அதே நேரத்தில் துணை அரசு வழக்கறிஞர் நூர் ஃபேசா ஜாஃப்ரி அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here