இளவரசர் பிரின்ஸ் மீதான கற்பழிப்பு வழக்கு; நியூயோர்க் நீதிமன்றத்தில் விசாரணை!

இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத்தின் மகன் மீது பாலியல் குற்றச்சாட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகனும், இளவரசர்களில் ஒருவருமான பிரின்ஸ் ஆண்ட்ரூ மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது 61 வயதான பிரின்ஸ் ஆண்ட்ரூ மீது கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர் மீது அமெரிக்க பெண் ஒருவர் கற்பழிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரின்ஸ் ஆண்ட்ரூ 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றிருந்த போது விர்ஜீனியாவுக்கு, இளவரசர் பிரின்ஸ் ஆண்ட்ரூ பாலியல் தொல்லை கொடுத்து கற்பழித்ததாகவும் கூறப்படுகிறது.

தனக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக அவர் நியூயோர்க் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான விசாரணை கடந்த புதன்கிழமை (நவம்பர் 4) காணொளிக் காட்சி மூலம் நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here