கோவிட்-19 தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாத விடுமுறை ; சிங்கப்பூர் அரசு அதிரடி

‘சிங்கப்பூரில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு, சம்பளம் இல்லாத விடுமுறை வழங்கப்படும்’ என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

சிங்கப்பூரில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 3,635 பேர் பாதிக்கப்பட்டனர், மற்றும் 12 பேர் உயிரிழந்தனர். இதுவரை, 2.07 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 442 பேர் உயிரிழந்துள்ளனர். தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, சிங்கப்பூர் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி , நாட்டின் சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்தது. அதில், ‘கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை முழுமையாக செலுத்திய அரசு ஊழியர்கள் மட்டுமே, வரும் 2022 ஜனவரி 1ஆம் திகதி முதல் மீண்டும் அலுவலகத்திற்கு வர அனுமதிக்கப்படுவர்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவ காரணங்களால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்களுக்கு, வீட்டில் இருந்து பணியாற்றும் வகையிலான பணிகள் வழங்கப்படும் என்றும் அது குறிப்பிட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here