குளிரூட்டும் வசதி தேவைப்படாத புதிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் குளிரூட்டும் வசதி தேவைப்படாத புதிய கொரோனா தடுப்பூசி  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா- பாஸ்டன் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சி குழுவினர் இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர்.

இந்த தடுப்பூசி வைரசின் முனைப்பகுதியில் உள்ள புரோட்டினை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த தடுப்பூசியை அறை வெப்பநிலையிலேயே 7 நாட்கள்வரை வைத்திருந்து  பயன்படுத்தலாம். அது 7 நாட்கள்வரை சீராகவும், செயல்திறன் மிக்கதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை கோரி விஞ்ஞானிகள் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் குறித்த தடுப்பூசி கொரோனாவை உருவாக்கும் சார்ஸ் வைரஸ் மற்றும் அதன் உருமாறிய ரகங்களுக்கு எதிராக சிறப்பான நோய் எதிர்ப்பு சக்தியையும் இது அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here