தமிழ்ப்பள்ளி ஆசிரியை கோமதி சங்கரனுக்கு GURU IKON STEM 2021 விருது

தமிழ்ப்பள்ளி ஆசிரியை கோமதி சங்கரனுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) சிறந்த செயல்திறன் சாதனை ஆசிரியர் விருது ( GURU IKON STEM) 2021 வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

நமது ஆசிரியை கோமதி சங்கரன் அவர்களுக்கு சிறந்த செயல்திறன் சாதனை ஆசிரியர் விருது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) 2021 என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி ஆசிரியருமான இவருக்கு இவ்விருது கிடைத்ததில் நாம் அனைவரும் பெருமையடைகிறோம்.

ஜோகூர் மாநில அளவிலான ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜோகூர் மாநில கல்வித் துறை நடத்திய “ஆசிரியர் தின விருது விழா2021” ஆம் ஆண்டுக்கான விருதுக்கும் தேர்வுப்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விருது ஜோகூர் மாநிலத்தின் தலைமை அமைச்சர்( Menteri Besar) மாண்புமிகு டத்தோ ஹாஜி ஹஸ்னி பின் முகமது அவர்களால் வழங்கப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக அறிவியல் விழாக்களில் தம் மாணவர்களோடு பங்கெடுத்து பல சிறந்த புத்தாக்க விருதுகளையும் ,சிறப்பு பரிசுகளையும் பெற்றுள்ளார். தன் மாணவர்களுக்கு எப்போதும் ஒரு சிறந்த வழிக்காட்டியாகவும்,முன் மாதிரியாகவும் விளங்கும் இவர் தன் திறமையையும் வெளிக்குணர பல அறிவியல் புத்தாக்க தொழில் முறை நிலை(profesional level) பிரிவில் கலந்துக்கொண்டு பள்ளி, மாவட்டம், மாநிலம், தேசியம் மற்றும் அனைத்துலக ரீதியில் பல வெற்றி பதக்கத்தை குவித்துள்ளார் என்பது நம் தமிழ்ப்பள்ளிக்கு கிடைத்த மிக சிறந்த நல்ல பெயர் ஆகும். ஆசிரியை கோமதி சங்கரன் உலக அரங்கில் நம் தமிழ்ப்பள்ளியின் தரத்தை உயர்த்தியுள்ளார் என்பது பாராட்டதக்கதாகும்.

இவரின் கல்வி பயணத்தில் பல விருதுகளை வென்றுக் குவித்த ஆசிரியை கோமதி, அனைத்துலக அரங்கில் தடம் பதித்தார் கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி ஆசிரியை ச.கோமதி. இவர் சுமார் 130க்கும் மேற்பட்ட அனைத்துலக புத்தாக்க போட்டியில் தங்க பதக்கங்களை வென்றுள்ளார். கோமதி ஆசிரியரின் வழிகாட்டலில் நிறைய நம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பல வெற்றிப் பதக்கங்களை பெற்றுள்ளனர்.கோமதி ஆசிரியரின் பல புத்தாக்க சிந்தனைகளும் ,புத்தாக்க அறிவியல் கண்டுப்பிடிப்புக்களும் அனைத்துலக ரீதியில் மிக சிறந்த புத்தாக்க விருதினை வென்றுள்ளன.

இவரின் கல்வி பயணத்தில் பல விருதுகளை பெற்று குவித்த ஆசிரியை கோமதி, தற்சமயம் கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணி புரிகிறார்.மேலும் இவர் கல்வி அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட “அறிவியல் நனி சிறந்த ஆசிரியர்” ஆவார். இவரின் ஆசிரியர் பணியில் இவருக்கு 2004,2008 ,2014 , 2020 ஆண்டுகளில் கல்வி அமைச்சால் “நனி சிறந்த சேவையாளர்” விருதுகளும் கிடைத்துள்ளது.

இவருக்கு 2016 -ம் ஆண்டு ‘சிறந்த புத்தாக்க ஆசிரியர்’ (INNOVATION TEACHER) எனும் விருதினை வழங்கிச்சிறப்பித்தது மலேசியக்கல்வி அமைச்சு. நம் சமுதாயத்தைத் தலை நிமரச்செய்த நம் இந்திய மாணவர்களை செதுக்கிய சிற்பிகளான தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் பங்கு மிக மிகப் பெரியது என நன்குணர்ந்த அஸ்தி நிறுவனம் தன் 10-ஆம் ஆண்டு இளம் அறிவியல் ஆய்வாளர் விழாவில் ,ஆசிரியை கோமதியை கெளரவிக்கும் வகையில் “இராமானுஜர் விருது” வழங்கி சிறப்பித்தது. மேலும் 2017-ம் ஆண்டு மலாயத்தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் ஜொகூர் மாநில கிளையின் எற்பாட்டில் ஆசிரியை கோமதிக்கு “ ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் உதாரண ஆசிரியருக்கான விருது” முன்னால் சுகாதார அமைச்சருமான டத்தோ. ஸ்ரீ. எஸ். சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.

அண்மையில் இவருக்கு சர்வதேச புத்தாக்க எதிர்கால கல்வி உச்சநிலை மாநாட்டில் நமது ஆசிரியை கோமதி சங்கரன் அவர்களுக்கு INNOVATIVE EDUCATOR AS A CHANGEMAKER AWARD 2021 என்ற சர்வதேச அளவிலான விருது வழங்கப்பட்டுள்ளது.

செய்தி – கிருஷ்ணன் ராஜு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here