தென்கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் இந்தியா மற்றும் இலங்கை உட்பட பல நாடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் இலங்கையில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதோடு 76 இடர் நிவாரண மையங்களில் 12,470 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இலங்கையின் 17 மாவட்டங்களில் வீதிகள், பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.