Undi18: சிலாங்கூர் மாநில அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்படும்

நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கும் சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில், தேர்தல் வேட்பாளர்களாக இருப்பதற்கான தகுதியான வயதை 18 ஆகக் குறைக்கும் வகையில்  சிலாங்கூர் மாநில அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தும்.

தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களின் குறைந்தபட்ச வயதை 21ல் இருந்து 18 ஆகக் குறைப்பதற்கான கூட்டாட்சி அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு ஜூலை 15, 2019 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் மனித  வள  மேம்பாட்டுக் குழுத் தலைவர் முகமட் கைருடின் உத்மான் தெரிவித்தார்.

சிலாங்கூரின் எதிர்காலத்திற்காக மாநிலத்தில் உள்ள இளைஞர்களின் உத்வேகம் மற்றும் மேம்பாட்டிற்கு மாநில அரசாங்கம் முழு ஆதரவளிக்கிறது என்று அவர் இன்று சிலாங்கூர் உண்டி18 டவுன்ஹால் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here