கோவிட்-19 தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கு பிறப்பித்த ஆஸ்திரியா

ஐரோப்பா நாடான ஆஸ்திரியாவில், கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை அடுத்த கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பல புதிய கட்டுப்பாடுகளை ஆஸ்திரியா அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தடுப்பூசி போடாதவர்கள், வீட்டில் இருந்து அலுவலகம், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைக்கு மட்டும் செல்ல அனுமதி உள்ளது.

அதே நேரத்தில் மற்ற இடங்களுக்கு சென்றால், அதற்கேற்ப அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அனைவரும் தடுப்பூசி சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்களை அனுமதிக்கும் வர்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றுக்கும் அபராதம் விதிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரியாவில், 65 சதவீத மக்களே இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here