நாட்டில் 95.9% விழுக்காட்டு பெரியவர்கள் முழுமையான தடுப்பூசியை பெற்றுள்ளனர்

வியாழன் (நவம்பர் 25) நிலவரப்படி, நாட்டில் பெரியவர்களில் (வயது வயந்தோரில்) 95.9% பேர் அல்லது 22,442,346 நபர்கள் தங்கள் கோவிட்-19 தடுப்பூசியை முடித்துள்ளனர். சுகாதார அமைச்சின் CovidNow போர்ட்டலின் அடிப்படையில், 98% அல்லது 22,944,240 நபர்கள் குறைந்தபட்சம் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயதிற்குட்பட்ட இளம் பருவத்தினரைப் பொறுத்தவரை, அவர்களில் 87.7% அல்லது 2,762,739 நபர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் 82.8% அல்லது 2,607,392 நபர்கள் தடுப்பூசியை முடித்துள்ளனர்.

வியாழனன்று மொத்தம் 138,752 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இரண்டாவது டோஸாக 8,428 டோஸ்கள், முதல் டோஸ் பெறுபவர்களுக்கு 5,067 டோஸ்கள் மற்றும் பூஸ்டர் டோஸாக 125,257 டோஸ்கள், தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மொத்த டோஸ்களின் எண்ணிக்கையை 1,42,43 ஆகக் கொண்டு வந்தது.பூஸ்டர் டோஸில், இதுவரை மொத்தம் 1,823,474 டோஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here