பிரெஸ்மாவின் 17ஆம் ஆண்டு பொதுக்கூட்டம்

மலேசிய முஸ்லீம் உரிமையளர்கள் சங்கத்தின்  (பிரெஸ்மா) 17ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் வரும் 16.12.2021 வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி தொடங்கி மாலை 6 மணி வரை Dewan pusat Komuniti Sentul Perdana, Jalan 2/48A, Sentul Perdana Bandar Baru Sentul, Kuala Lumpur என்ற முகவரியில் நடைபெறும் என்று சங்கத்தின் பொது செயலாளர் ஹபிஃபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

சங்கத்தின் 17ஆம் ஆண்டுக் கூட்டத்திற்கு எச்ஆர்டி கார்ப். தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஷாகுல் அமீது சிறப்பு வருகை புரியவிருக்கிறார். உறுப்பினர்கள் தவறாமல் மறவாமல் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஆண்டு சந்தா நிலுவையில் இருக்கும் பிரெஸ்மா உறுப்பினர்கள் ஆண்டுக் கூட்டத்தின் போது சந்தா செலுத்தலாம். ஆனால் கூட்டநெரிசலை தவிர்க்க உறுப்பினர்கள் சந்தா தொகையை செலுத்தி தங்களின் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here