நாளை முதல் வனக் காப்பகங்களில் மலையேற்ற நடவடிக்கைகளுக்கு அனுமதியில்லை – சிலாங்கூர் வனத்துறை

ஷா ஆலம், நவம்பர் 30 :

நாளை (டிசம்பர்1) முதல் மாநிலத்தில் உள்ள நிரந்தர வனக் காப்பகங்களில் (HSK) மலையேற்ற நடவடிக்கைகளுக்கு அனுமதியில்லை என்று சிலாங்கூர் வனத்துறை (JPNS) தெரிவித்துள்ளது .

சிலாங்கூர் வனத்துறை இயக்குநர் டத்தோ அகமட் ஃபட்சில் அப்த் மஜித், “மாநிலத்திலுள்ள நிரந்தர வனப் பகுதிகளில் அனைத்து மலையேறும் நடவடிக்கைகளும் அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை மூடப்படும்” என்று சிலாங்கூர் வனத்துறையின் அதிகாரப்பூர்வ முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட அறிவிப்பின் மூலம் கூறினார்.

மேலும்”அத்துமீறி நுழைபவர்கள் மீது தேசிய வனச்சட்டம் 1985 (தத்தெடுப்பு) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அவரைத் தொடர்பு கொண்டபோது, தற்போதைய பருவமழை காலத்தில் ஏறுபவர்களுக்கு ஏற்படும் காயங்கள் அல்லது விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கிலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

இது தொடர்பான மேலதிக தகவலுக்கு பொதுமக்கள் JPNS ஐ 03-55447000/03-55447507 அல்லது admin-eco-park@forestry.gov.my என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

-பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here