தீயில் எரிந்து டஜன்கணக்கிலான கார்கள் சாம்பலானது

பினாம்பாங்கில் ஒரு பர்னிச்சர் கடைக்கு அருகில் உள்ள ஜாலான் ராமையா என்ற இடத்தில் ஒரு பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல  வாகனங்கள் எரிந்து சாம்பலானது. காலை 9.20 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், தொழிலாளர்களின் வீடுகள் மற்றும் பறவைகள் கூடு வீடுகளும் சேதமானது. ஆனால் காயங்களோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.

மேலும், இந்த தீ விபத்தால் சம்பவ இடத்தில் கடும் புகை மூண்டது, அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தீயில் சாம்பலான சில வாகனங்கள் அவற்றின் உரிமையாளர்களால் பணிமனையில் பழுதுபார்ப்பதற்காக அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.

பினாம்பாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் குழு காலை 9.29 மணிக்கு அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.

தீயின் அளவு காரணமாக, கோட்டா கினாபாலு மற்றும் லின்டாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் இருந்து தீயணைப்புப் படைக் குழுக்களும் தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு உதவியதாக அவர் கூறினார்.

“தீயணைக்கும் பணியானது தீயணைப்பு இயந்திரங்களில் இருந்து தண்ணீரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது, மேலும் காலை 10.26 மணியளவில் தீ வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது.

“அத்துடன் ராயல் மலேசியா காவல்துறை (PDRM), மலேசிய குடிமைத் தற்காப்புப் படை (APM), மற்றும் Sabah Electricity Sdn Bhd (SESB) ஆகியோரும் சம்பவ இடத்தில் இருந்தனர்” என்று அவர் இன்று ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

“தீ விபத்துக்கான காரணம் மற்றும் இழப்புகளின் அளவு இன்னும் விசாரணையில் உள்ளது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here