இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை; 13 பேர் பலி !

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமேரு எரிமலை நேற்று கடும் சீற்றத்துடன் வெடித்துச் சிதறியது. இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த எரிமலையிலிருந்து நேற்று முன்தினம் லேசான புகை ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று திடீரென்று எரிமலை வெடித்து சிதறியது.

எரிமலையில் இருந்து வெளியேறிய நெருப்புக் குழம்புகள் அருகில் உள்ள கிராமங்களை சூழ்ந்துள்ளதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மற்றும் சாம்பல் படர்ந்துள்ளது. எரிமலையை சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறினர். எனினும் பலர் வெளியேற முடியாமல் வீடுகளில் சிக்கிக்கொண்டனர். மேலும் அப்பகுதிகளில் அதிகரிக்கும் வெப்ப காற்றால் மக்கள் தவித்து வருகின்றனர்.

பாதிக்கப்படடவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். எரிமலையைச் சுற்றி 5 கிமீ பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here