பினாங்கின் இலவச பேருந்து சேவை அடுத்த ஆண்டும் தொடரும்

ஜார்ஜ் டவுன், டிசம்பர் 7 :

பினாங்கு அரசாங்கம் 2022 ஆம் ஆண்டில் முத்தியாரா அனுமதி அட்டை (Mutiara pass) வைத்திருப்பவர்களுக்கு, மாதாந்திர அடிப்படையில் இலவச பேருந்து சேவையை வழங்கும் என்று மாநில உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துக் குழுத் தலைவர் ஜைரில் கிர் ஜோஹாரி கூறினார்.

ஒரு மாதத்திற்கு RM50 மதிப்புள்ள முத்தியாரா அனுமதி அட்டைகளுக்கான புதுப்பித்தல் கட்டணத்தை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஆண்டுக்கு 4.5 மில்லியன் வெள்ளி ஒதுக்கீட்டை உள்ளடக்கிய இந்த முயற்சி, ஜனவரி 1 முதல் டிசம்பர் 31, 2022 வரை அமலில் இருக்கும் என்றார்.

“மாதாந்திர அனுமதி அட்டையைப் புதுப்பித்துக்கொள்ளும் முதல் 7,500 பாஸ்தாரர்களுக்கான செலவை மாநில அரசே ஏற்கும். செயலில் உள்ள விரைவுப் பேருந்து பயனாளிகள் இந்த முயற்சியிலிருந்து பயனடைவார்கள் என்பதை நாம் உறுதிசெய்ய விரும்புகிறோம்.

“முத்தியாரா அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் அட்டையை இலவசமாக புதுப்பிக்கலாம், அதே நேரத்தில் முதல் முறையாக வாங்கும் போது 10வெள்ளி வசூலிக்கப்படும் என்றும் இதில் அட்டைக்கு 5 வெள்ளியும் டாப்-அப்பிற்கு 5வெள்ளியும் அடங்கும்” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜனவரி 1, 2022 முதல் 10 பேருந்துகளைப் பயன்படுத்தி ஒரு வருடத்திற்கு CAT பிரிட்ஜ் இலவச பேருந்து சேவையைத் தொடர மாநில அரசு ஒப்புக்கொண்டதாகவும், பயண அட்டவணை வழக்கம் போல் இருப்பதாகவும் ஜைரில் கூறினார்.

“மேலும், மாநில அரசு இனி செபராங் ஜெயா CAT இலவச பேருந்து சேவைக்கு நிதியளிக்காது என்றும் இது ஒரு சாதாரண போக்குவரத்தாக தொடர்ந்து செயல்படும் என்றும் இது முத்தியாரா அனுமதி அட்டை பயனர்களுக்கு இலவசம்” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here