கோலக்கிராய், ஜெலியில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது -நீர்ப்பாசன மற்றும் வடிகால் திணைக்களம்

கோப்புப்படம்

கோத்தா பாரு, டிசம்பர் 16 :

கிளாந்தான் நதிப் படுகையில் பெய்த கனமழை காரணமாக, ஜெலி மற்றும் கோலக்கிராயில் பல இடங்களில் வெள்ளம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று நீர்ப்பாசன மற்றும் வடிகால் திணைக்களத்தின் (ஜேபிஎஸ்) அறிவித்துள்ளது.

தேசிய வெள்ள முன்னறிவிப்பு மற்றும் வெள்ள எச்சரிக்கை மையத்தின் (பிஆர்ஏபிஎன்) அறிக்கையின் படி , வெள்ள எச்சரிக்கை இன்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி நாளை காலை வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் நேற்றைய வானிலை எச்சரிக்கையைத் தொடர்ந்து, கிளாந்தான் ஆற்றினை சுற்றியுள்ள பகுதிகளில் நீடித்த கனமழை பெய்தால், இரு மாவட்டங்களிலும் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கும் என்று அவர் கூறினார்.

“இன்று நள்ளிரவு முதல் கோலாக்கிராயில் வெள்ளம் வரும் என்று எதிர்பார்க்கப்படும் இடங்களாக: கம்போங் டாபோங், கம்போங் மானெக் உறை, கம்போங் மெசெக், கம்போங் காஜா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஜெலியில், கம்போங் லாவார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் அடங்கும் ,” என்று அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி, நாளை காலை முதல் கோலாக்கிராய் மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“கம்போங் பெடல், கம்போங் புக்கிட் சிரே, தாமான் வாரிசான், கம்போங் பெர்டாங், கம்போங் நகாகோ, கம்போங் பாஹி, கம்பபோங் அவுர் தூரி ஆகிய இடங்கள் உள்ளன.

“கம்போங் கூச்சில், கம்போங் ஜிராட், கம்போங் காடல், கம்போங் பத்து மெங்கெபாங், கம்போங் கெரோ, கம்போங் பத்து ஜாங் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும்” என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், குறிப்பாக வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், நேற்று முதல் இன்று வரை கிளாந்தான், திரெங்கானு மற்றும் பகாங் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here