ஓமிக்ரோன் தொற்றுக் காரணமாக பயணத்தடை விதிக்கப்பட்ட 11 ஆப்பிரிக்கா நாடுகள் மீதான தடையை பிரிட்டன் அரசு நீக்கியுள்ளது.
ஓமிக்ரோன் தொற்றுக் காரணமாக அங்கோலா, போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டன் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததுடன் அந்நாடுகள் சிவப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பில் தகவல் தெரிவித்த பிரிட்டன் சுகாதாரத்துறை செயலாளர் சாஜித் ஜாவித் கூறியதாவது, ஓமிக்ரோன் எதிர்பார்க்கப்பட்டது போல் சமூகப் பரவலாக இல்லாததால், 11 நாடுகளை சேர்ந்தவர்கள் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் கட்டாயமாக தங்களை சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.