தங்கம் தோண்டிய ஆடவர் நிலச்சரிவில் சிக்கி மரணம்

கோப்புப்படம்

கோல திரெங்கானு, டிசம்பர் 16 :

இங்குள்ள கம்போங் ஆயர் செஜுக்கில், நேற்று தங்கம் தோண்டியபோது நிலச்சரிவில் சிக்கி 34 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

செதியு மாவட்ட காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி அஃபாண்டி ஹுசின் கூறுகையில், தனது பெற்றோருடன் அந்தப் பகுதிக்கு சென்றிருந்த முகமட் ஜோஹாரி முகமட் அஸ்ரி என்ற பாதிக்கப்பட்ட ஆடவர், மாலை 5 மணியளவில் மூன்று மீட்டர் ஆழமான குழியில் தங்கம் தோண்டிக் கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டது.

“இடைவிடாமல் பெய்த கனமழையால் தேடுதல் பணியை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.

“தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவியுடன், நேற்று இரவு 7 மணியளவில் பாதிக்கப்பட்டவர் கண்டுபிடிக்கப்பட்டார், அவரது உடல் அரை மணி நேரம் கழித்து வெளியே கொண்டு வரப்பட்டது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான முகமட் ஜோஹாரியின் சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக செதியு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அஃபாண்டி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here