போக்குவரத்துக்கு எதிராக வாகனமோட்டிய ஓட்டுநருக்கு 6 மாதங்கள் சிறை, RM8,000 அபராதம் விதித்த நீதிமன்றம்

கோலாலம்பூர், டிசம்பர் 17 :

இங்குள்ள செராஸ் சுற்றுவட்டப்பாதையில்போக்குவரத்துக்கு எதிராக வாகனமோட்டிய ஓட்டுநருக்கு, கோலாலம்பூர் போக்குவரத்து நீதிமன்றம் இன்று ஆறு மாத சிறைத் தண்டனையும், 8,000 ரிங்கிட் அபராதமும் விதித்தது.

கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் (JSPT) தலைமை துணை ஆணையர் சரிபுடின் முகமட் சலே இது பற்றிக் கூறியபோது, 34 வயது அந்தநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து நீதிமன்றத்தால் இத்தண்டனை வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

“சமூக ஊடகங்களில் பரவிய சம்பவத்தின் காணொளியைத் தொடர்ந்து விசாரணைக்கு உதவுவதற்காக டிசம்பர் 13ஆம் தேதியன்று, இரவு 10 மணிக்கு காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டார்.

” பின்னர் அந்த நபர் சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 42 (1) இன் கீழ் பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான வாகனம் ஓட்டியதற்காக குற்றம் சாட்டப்பட்டார்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, குற்றம் சாட்டப்பட்டவர் ஐந்து ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் எடுக்க நீதிமன்றம் அனுமதிக்கவில்லை என்றும், ஓட்டுநர் உரிமத்தில் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காகவும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது அதே சட்டத்தின் 26 (1) பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

டிசம்பர் 13 அன்று, செராஸ் சுற்றுவட்டப்பாதையில் போக்குவரத்துக்கு எதிராக வாகனமோட்டிய போது, எதிராகச் சென்ற வாகனங்களின் உரிமையாளர்களை போலீசார் அழைத்ததாகவும் இது தொடர்பான TikTok பயன்பாட்டில் உள்ள ஒரு நிமிடம் 28 வினாடிகள் நீடிக்கும் காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் பெரிதும் பகிரப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here