எரிப்பொருள் விலையில் மாற்றம்

பெட்டாலிங் ஜெயா: பிப்ரவரி 27 முதல் மார்ச் 3 வரை RON97 மற்றும் RON95 எரிபொருள் விலை ஐந்து சென் அதிகரிக்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

RON97 பெட்ரோலுக்கான சில்லறை விலை லிட்டருக்கு RM2.30 இலிருந்து RM2.35 ஆகவும், RON95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு RM2 இலிருந்து RM2.05 ஆகவும் அதிகரிக்கும் என்று அது கூறியது. டீசலின் விலை லிட்டருக்கு RM2.15 ஆக மாறாமல் இருக்கும்.

“உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகளின் போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்” என்று அமைச்சகம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 26) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here