ஜப்பான் நாட்டில் மிகப்பெரிய துறைமுக நகரமான ஒசாகாவின் வர்த்தக கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர் மற்றும் 23 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்கு ஜப்பான் நாட்டில் ஒசாகாவில் 8 மாடி கட்டிடத்தில் 4ஆவது தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது பற்றி அறிந்ததும் ஏராளமான தீயணைப்புப் படை வீரர்கள் அங்கு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

இந்த விபத்தில் கட்டடத்தின் 4ஆவது தளத்தில் இருந்த 27 பேர் இறந்தனர். 23 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் மற்ற தளத்தில் இருந்தவர்களை அங்கிருந்து வேகமாக அப்புறப்படுத்தினார்கள்.
இவ்விபத்தில் கட்டடத்தின் நான்காம்மாடி கடுமையாக சேதமடைந்துள்ளது.
இக்கட்டடத்தில் வர்த்தக நிலையங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அரங்குகள், மருத்துவ சிகிச்சை நிலையங்கள் செயல்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.








