சாப்பிடுவதற்கும்.. குடிப்பதற்கும்.. நன்றாக வாழ்வதற்கும்.. முதுகலை பட்டபடிப்பை அறிமுகம் செய்த பிரான்ஸின் பிரபல பல்கலைக்கழகம்

பிரான்சில் உள்ள ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த வித்தியாசமான பட்டப்படிப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதாவது பிரான்சின் மிகவும் பிரபலமான அரசியல், அறிவியல் பள்ளிகளில் ஒன்றாக கருதப்படும் சயின்சஸ் போ லில்லில் (Sciences Po Lille) சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும், நன்கு வாழ விரும்புவர்களுக்கும் ஒரு முதுகலை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த முதுகலை பட்டப்படிப்பு BMW என்று அழைக்கப்படுகிறது. BMW என்பது ‘போயர்(boire), மேங்கர் ( manger), விவ்ரே(vivre)’ என்பதன் சுருக்கமாகும். இதில் உணவு, பானங்கள் மற்றும் ‘வாழ்க்கை’ ஆகியவற்றை குறிக்கும் வகையில் பாடங்கள் அமைந்திருக்கும் என கூறப்படுகின்றது.

இந்த படிப்பு gastro-diplomacy யை சார்ந்து காணப்படுகிறது, உணவு குறித்த தொழில்நுட்ப்பம், சமயலறையில் பாலின பாகுபாடு போன்றவை குறித்து இது விளக்குகிறது. விரிவுரையாளர் Benôit Lengaigne தனித்துவமான சில பாடங்களை கற்பித்து வருகிறாராம்.

அதில் முக்கியமானது ‘terrestrial foods’. கட்டுரைகளை எழுதுவதை விட தாவர அடிப்படையில் மாறுபாடு செய்தல், விவசாயத்தின் வரலாறு மற்றும் இதர தலைப்புகளை கலந்துரையாடலின் மூலம் மாணவர்களுக்கு விளக்கப்படுகிறது.

இது குறித்து விரிவுரையாளர் Benôit Lengaigne கூறுகையில் இந்த புதிய படிப்பை பற்றி முதலில் மாணவர்களிடம் கூறியபோது அனைவரும் இதற்கு சிரித்தனர். ஆனால் இது மாணவர்களுக்கு எளிதில் ஒரு ஆர்வத்தை தூண்டும் வகையில் அமையும். இதுகுறித்து முழுமையாக யாருக்கும் தெரியாது, ஆனால் இது கவர்ச்சிகரமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த பட்டப்படிப்பு அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் அமைகிறது. இந்த அவசர உலகத்தில், உணவு சவாலான ஒன்றாக இருக்கும், அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த படிப்பு அமையக்கூடும் என பல்கலைகழக மாணவர் ஒருவர் கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here