3 பேருக்கு கோவிட்-19 தொற்று ; முடக்கநிலையை அறிவித்த சீனா!

சீனாவின் யூசோ நகரில் 3 பேருக்கு கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, அங்கு முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 1.17 மில்லியன் மக்கள் தொகை கொண்ட யூசோ நகரில், அனைத்துக் குடியிருப்பாளர்களும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என நேற்றிரவு அறிவிக்கப்பட்டதாக அறியமுடிகிறது.

மேலும் நகரின் மத்திய வட்டாரத்தில் வசிப்போர் வெளியே செல்லக்கூடாது என்றும் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. அதேவேளை நகரின் பேருந்து, டாக்ஸி சேவைகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டன.

கடைத்தொகுதிகளும் சுற்றுலாத் தலங்களும் ஆகியவையும் மூடப்பட்டுவிட்டதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. சீனாவில் புதிதாக 175 பேருக்குக் கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளை விட, இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் கடந்த வாரங்களில் அங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு புதிய உச்சத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here