பிலதெல்பியா, ஜனவரி 6:
அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் பிலதெல்பியா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலையில் பிலதெல்பியா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள நேரத்தின்படி சுமார் காலை 6.40 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். ஏறக்குறைய 50 நிமிட போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்ததாக பிலதெல்பியா தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 4 தீ கண்டறியும் கருவிகள் இருந்துள்ளன. அவை வேலை செய்யாததே உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு நடந்து வருகிறது.