ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 6:

இங்குள்ள ஐரோப்பிய ஒன்றிய (EU) தூதுக்குழுவின் மூன்று தூதர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியதுடன் தங்களின் அனுதாபத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர்.

குருத்வாரா சாஹிப் பெட்டாலிங் ஜெயாவிற்கு 25 தன்னார்வத் தொண்டர்கள் குழுவை வழிநடத்த ஐரோப்பிய ஒன்றிய தூதர் மிச்சாலிஸ் ரோகாஸ், தனது ஜெர்மன் பிரதிநிதி டாக்டர் பீட்டர் ப்ளோமேயர் மற்றும் குரோஷியாவின் டாக்டர் இவான் வெலிமிர் ஸ்டார்செவிக் ஆகியோருடன் இணைந்து இந்த உதவி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் குருத்வாரா சாஹிப் பக்தர்களுக்கு அவர்கள் நன்கொடையாக வழங்கிய உணவு மற்றும் தேவைகளைப் பொதி செய்து, வரிசைப்படுத்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக சிலாங்கூரின் உ லு லங்காட்டில் பகுதியில் விநியோகித்தனர்.

“இது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் மலேசியாவில் உள்ள தூதரகங்களில் இருந்து ஒரு சிறிய முயற்சி மற்றும் எங்களது ஒற்றுமையைக் காட்டவும் பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு நிவாரணம் அளிக்கவும் இது ஒரு வாய்ப்பாகும்.

“வெள்ள நிவாரண உதவிகளை ஒருங்கிணைப்பதில் குருத்வாரா சாஹிப்பின் அயராது உழைத்ததற்காக நான் அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்ட விரும்புகிறேன்,” என்று ரோகாஸ் கூறினார்.

கடந்த இரண்டு வாரங்களாக, நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை அடியோடு மாற்றிவிட்டது.

இன்றுவரை, ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய தன்னார்வலர்கள் வழங்கிய பொருட்களில் 5 கிலோ எடை கொண்ட அரசி 100 பொட்டலங்கள், 100 அட்டைப்பெட்டிகள் குடிநீர், 150 சமையல் எண்ணெய் போத்தல்கள், நூடுல்ஸ் 25 பெட்டிகள், பால் பவுடர் 47 பாக்கெட்டுகள் மற்றும் 500 செட் கோவிட்-19 சுய பரிசோதனைக் கருவிகள் ஆகியவை அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here