முன்னாள் ஐஜிபி அக்ரில் சானி லஞ்சம் வாங்கியதாக ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ: போலீசார் விசாரணை

ஷா ஆலம்: முன்னாள் காவல் துறைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லாவைப் போன்ற ஒரு நபர், “டத்தோ” என்ற பட்டப்பெயர் கொண்ட ஒருவரிடமிருந்து நிதி உதவி பெற்றதாகக் கூறப்படும் வைரல் காணொளியை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜூன் 20 ஆம் தேதி டிக்டோக்கில் பரவத் தொடங்கிய இந்த காணொளி போலியானது என்றும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி கையாளப்பட்டது என்றும் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் உமர் கான் கூறினார்.

முன்னாள் காவல்துறைத் தலைவர் அப்துல் கானி என்ற நபரிடமிருந்து நிதி உதவி பெற்றதாகவும், பணம் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டதாகவும் கூறும் காணொளி உண்மைக்குப் புறம்பானது மற்றும் ஆதாரமற்றது.

13ஆவது ஐஜிபி வீடியோவில் சித்தரிக்கப்பட்டுள்ளபடி எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்று சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகம் வலியுறுத்துகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். அக்ரில் சானி இதனை மறுத்ததோடு  காவல் துறையில் புகாரினஒ தாக்கல் செய்துள்ளதாக ஹுசைன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here