சிலி மற்றும் சீனாவில் வலிமையான நிலநடுக்கம்

ஜனவரி 8:

சிலி நாட்டின் சுரங்க நகர் பகுதியான கோபியாப்போவில் இருந்து வடமேற்கே 112 கி.மீ. தொலைவில் கடற்கரையோர பகுதியில் இன்று காலை வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

அதனைத்தொடர்ந்து, சீனாவில் உள்ள கிங்காய் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

கிங்காய் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அருகில் இருக்கும் கன்சு, சாங்ஷி, உள்ளிட்ட மாகாணங்களிலும் உணர முடிந்ததாக மக்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. பாதிப்பு குறித்த மூழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here