கோலாலம்பூர், ஜனவரி 8 :
சரவாக்கின் 10 பகுதிகளுக்கு ஜனவரி 11 (செவ்வாய்க்கிழமை) முதல் ஜனவரி 13 வரை தொடர் மழை எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) விடுத்துள்ளது.
மலேசிய வானிலை ஆய்வு மையம் இன்று நண்பகல் டுவீட்டரில் வெளியிட்டுள்ள வானிலை எச்சரிக்கையின்படி, கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், பேத்தோங், சரிகேய், சிபு, முகா, காபிட் (Song and Kapit) மற்றும் பிந்துலு (டாடாவ்) ஆகிய பகுதிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளாகும்.
மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அமைப்பின் கீழ், எச்சரிக்கை நிலை அல்லது மஞ்சள் நிறம் ஒன்று முதல் மூன்று நாட்களுக்கு இடைப்பட்ட தொடர் மழை எதிர்பார்க்கப்படுகிறது என்பதைக் குறிக்கிறது.