விடாது துரத்தும் கொரோனா; ஓமிக்ரானை அடுத்து டெல்தாக்ரானாம்..!

டெல்தாவும் ஓமிக்ரானும் இணைந்த டெல்தாக்ரான் எனும் புதிய கொரோனா மாறுபாடு பரவி வருவதாக மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிப்ரஸ் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் ஏற்படும் பாதிப்புகளையும் சந்திக்க தயாராகுங்கள் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிய புதிய மாறுபாடுகளாக பரவி வருகிறது. அந்த வகையில் இதுவரை ஆல்பா, பேத்தா, டெல்தா உள்ளிட்ட மாறுபாடுகள் உலகம் முழுவதும் பரவின.

அண்மையில் தென்னாப்பிரிக்காவில் புதிய மாறுபாடான ஓமிக்ரான் உருவானது. இது தற்போது 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த ஓமிக்ரான் பரவல் மிக வேகமாக அதிகரித்துவருகிறது.

இந்த நிலையில் சிப்ரஸ் எனும் மத்திய கிழக்கிந்திய நாட்டில் டெல்தாவும் ஓமிக்ரானும் இணைந்து டெல்தாக்ரான் எனும் புதிய மாறுபாடு பரவி வருகிறது. இதுகுறித்து சிப்ரஸ் பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி மற்றும் மாலிகுலர் வைராலஜியின் தலைவர் லியோடியாஸ் கோஸ்டிரிகிஸ் கூறுகையில் தற்போது ஓமிக்ரானும் டெல்தாவும் பரவி வருகிறது.

ஆனால் இவை இரண்டும் சேர்ந்த கலவையான புதிய வேரியண்ட்டை நாங்கள் பார்த்தோம். இதில் ஓமிக்ரான் மற்றும் டெல்தாவின் ஜீனோம்கள் இருப்பதால் அவற்றிற்கு டெல்தாக்ரான் என பெயரிட்டுள்ளோம். இதுவரை சிப்ரஸில் 25 பேருக்கு டெல்தாக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் டெல்தாக்ரான் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது விரைவில் அறியப்படலாம்.

இந்த புதிய மாறுபாடு ஓமிக்ரானை விட மிக வேகமாக பரவும் என்றார். இந்த வைரஸ் ஜனவரி 7ஆம் தேதி முதலில் அடையாளம் காணப்பட்டது. ஆனால் டெல்தாக்ரான் குறித்து உலக சுகாதார நிறுவனம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இதுகுறித்து சில வைராலஜி நிபுணர்கள் கூறுகையில் டெல்தாக்ரான் என்பது புதிய வேரியண்ட் அல்ல.

இது போல் ஒன்றை SARS-CoV-2 வைரஸ்களின் குடும்பத்தில் கண்டறிய முடியவில்லை. எத்தனையோ உருமாற்றங்களை கண்டாலும் எல்லா உருமாற்றங்களையும் கண்டு அஞ்ச தேவையில்லை. இது ஆர்என்ஏவில் காணப்படுகிறது. குறிப்பாக சுவாசம் தொடர்புடையது என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here