ஈப்போ, ஜனவரி 12 :
இங்குள்ள தாமான் மேரு 2B இல் உள்ள தனது வீட்டை விட்டு, ஜனவரி 4 முதல் வெளியேறிய வாலிபர் பின்னர் காணாமல் போனதாக போலீசார் தேடி வருகின்றனர்.
ஈப்போ மாவட்ட காவல்துறை தலைமையகம் (IPD) இன்று ஒரு அறிக்கையில், காணாமல் போன அந்த வாலிபர் 16 வயதுடைய டேனியல் ஹாசிம் மஸ்தம் என அடையாளம் காணப்பட்டதாகக் கூறியது.
சனிக்கிழமை நள்ளிரவு வரை, அந்த வாலிபர் வீடு திரும்பாததால், மேலும் பல நாட்களாகியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால், அவரது தந்தை ஜெலபாங் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த அறிக்கையின்படி, காணாமல் போனவர பற்றி தகவல்தெரிந்தவர்கள் துணை விசாரணை அதிகாரி சார்ஜென்ட் அஸ்லினா மாட் அலியை 05-2451628 மற்றும் 019-2119539 அல்லது ஈப்போ IPD 05-2451500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.





















