கிள்ளானில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக கடையின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்த ஆடவரின் ஒரு கை மற்றும் கால் முறிந்தது என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குனர் நோரஸாம் காமிஸ் கூறுகிறார்.
காலை 9.52 மணிக்கு தாமான் பூங்கா மலூரில் சம்பவ இடத்திற்கு வந்தது. கட்டிடத்தின் முதல் தளத்தில் தீப்பிடித்து எரிந்ததில் 80% எரிந்து நாசமானது என்றார்.காயமடைந்தவர் உட்பட 13 வெளிநாட்டவர்கள் கட்டிடத்தில் வசித்து வந்ததாக அவர் கூறினார். தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த நபர் குதித்துவிட்டார். மற்ற 12 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று அவர் கூறினார்.