ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு… மக்கள் அலறல்… புகைமண்டலமான குடியிருப்பு பகுதி..!

மேட்ரிட்: ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் பயங்கர சத்தத்துடன் கூடிய குண்டிவெடிப்பு நிகழ்ந்தது.

இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டனர்.

சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட விபத்து என்று ஒரு சிலரும் வெடிகுண்டு வெடித்ததால் ஏற்பட்ட விபத்து என சிலரும் இது குறித்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தை மேட்ரிட் மேயர் ஜோஸ் லூயிஸ் மேட்ரினாஸ் நேரில் ஆய்வு செய்துள்ளார். குண்டு வெடிப்பு நிகழ்ந்த கட்டிடத்தின் அருகாமையில் மருத்துவ கிளினிக் உள்ளிட்ட கட்டிடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்றும் 8 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த கட்டிடம் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் இடிபாடுகளில் சிக்கியிருப்போரை முழுவதும் மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

குண்டு வெடிப்பா அல்லது சமையால் எரிவாயு சிலிண்டர் வெடிப்பா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது உறுதிசெய்யப்பட்ட பின்னரே அடுத்தக்கட்ட விசாரணை என்ன கோணத்தில் இருக்கும் என தெரிய வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here