உலோகத் தயாரிப்பு ஆலையில் சுகாதாரக் குறைபாடு ; 32,000 வெள்ளி அபராதம்

பட்டர்வொர்த், ஜனவரி 16 :

இங்குள்ள பிராய் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு உலோகத் தயாரிப்பு தொழிற்சாலையில், சுகாதாராக் குறைபாடு காணப்பட்டதை தொடர்ந்து, பினாங்கு சுற்றுச்சூழல் துறை (DOE) அந்த தொழிற்சாலைக்கு எதிராக 32,000 வெள்ளி அபராதம் விதித்தது.

பினாங்கு மாநில சுற்றுச்சூழல் துறை இயக்குநர், ஷாரிபாஹ் சாக்கியா சாயிட் சஹாப் இதுபற்றிக் கூறுகையில், அந்த தொழிற்சாலை வளாகத்தில், நேற்று மேற்கொண்ட ஒரு ஆய்வின் போதே இந்த அபராதம் விதிக்கப்பட்டது என்று கூறினார்.

“பரிசோதனையின் போது, ​​சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள், பயன்படுத்தப்பட்ட கனிம எண்ணெயால் (SW குறியீடு 422) மாசுபட்ட உலோக கழிவுகளை கழுவி, அதன் பின்னர் அவை சுத்திகரிக்கப்படாமல் கழிவுகளை வெளியேற்றும் வளாகத்தின் செயல்பாடுகளைக் கண்டறிந்தனர்.

“சுற்றுச்சூழல் தர (திட்டமிடப்பட்ட கழிவு) விதிமுறைகள் 2005 மற்றும் சுற்றுச்சூழல் தர (தொழில்துறை கழிவுகள்) விதிமுறைகள் 2009 இன் கீழ் இது ஒரு குற்றமாகும், இதற்காக 32,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

“அதே நேரத்தில், உள்நாட்டில் உள்ள நீர் மாசுபாடு அடைவதைத் தடுக்க, வளாகத்தின் உபகரணங்களின் செயல்பாட்டை நிறுத்துவதற்கான அறிவுறுத்தல்களும் எடுக்கப்பட்டன,” என்று அவர் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

திட்டமிடப்பட்ட கழிவுகள் அனைத்தும் அதனுடன் தொடர்புடைய சட்டத்தின்படி நிர்வகிக்கப்படுவதை உறுதிசெய்ய, உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டதாக அவர் விளக்கினார்.

“மாநிலத்தில் திட்டமிடப்பட்ட கழிவுகளை உற்பத்தி செய்யும் அனைத்து உற்பத்தியாளர்களும், சுற்றுச்சூழல் இயக்குநரால் பரிந்துரைக்கப்பட்ட முறையான மேலாண்மை நடைமுறைகளின்படி உருவாக்கப்படும் திட்டமிடப்பட்ட கழிவுகளை அகற்றும் பணியை எப்போதும் பின்பற்றுவதை உறுதி செய்துக்கொள்ள நினைவூட்டப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here