கோவிட் தொற்றினால் இது வரை 31,781 பேர் பலி – நேற்றைய இறப்புகள் 19

சுகாதார அமைச்சகம் அதன் GitHub தரவுத்தளத்தின்படி, நேற்று 19 புதிய கோவிட்-19 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. அதில் ஆறு பேர் கொண்டு வரப்பட்டவர்கள் (BID) என வகைப்படுத்தப்பட்டனர். இறப்பு எண்ணிக்கை 31,781 ஆக உள்ளது.

சிலாங்கூர் (5)முதலிடத்தில் உள்ளது. பேராக் (3), சபா (3), பினாங்கு (2) தெரெங்கானு (2), ஜோகூர் (2), மலாக்கா (1) மற்றும் கோலாலம்பூர் (1).

நெகிரி செம்பிலான், கிளந்தான், சரவாக், கெடா, பெர்லிஸ், புத்ராஜெயா மற்றும் லாபுவான் ஆகிய நகரங்கள் எந்த மரணத்தையும் பதிவு செய்யவில்லை.

நள்ளிரவு நிலவரப்படி, 40,785 செயலில் உள்ள தொற்றுகள் உள்ளன. இதில் 193 தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) உள்ளனர். அவர்களில் 90 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

மேலும் 2,828 பேர் குணமடைந்துள்ளனர். மலேசியாவில் பதிவான மொத்த கோவிட்-19  தொற்றுகளின் எண்ணிக்கை 2,805,337 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here