டோங்கா தீவில் கடலுக்கு அடியில் வெடித்து சிதறிய எரிமலையால், உலகின் பல பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கோ. சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது.

இதற்கிடையில், அந்நாட்டில் உள்ள ஒரு தீவில் ஹுங்கா டோங்கோ என்ற எரிமலை அமைந்துள்ளது. அந்த எரிமலையின் பெரும்பகுதி கடலுக்கு அடியில் உள்ளது.

இந்நிலையில், அந்த தீவில் உள்ள எரிமலை நேற்று திடீரென வெடித்து சிதறியது. கடலுக்கு அடியில் எரிமலை வெடித்துள்ளது. இதனால், கடலில் சுனாமி அலை உருவானது.

இந்த எரிமலை வெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது, இது உலகம் முழுவதும் கடலில் 1.74 மீட்டர் (5.5 அடி) உயரமான அலைகளைத் தூண்டியது, மேலும் ஜப்பான் முதல் அமெரிக்கா வரையிலான பசிபிக் கடற்கரைகளை வெள்ளத்தில் மூழ்கடித்தது.

மேலும் சுனாமி அலைகள் டோங்கோ தீவில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்தன. குடியிருப்பு பகுதிக்குள் சுனாமி அலை புகுவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து மூன்று மீற்றருக்கும் அதிக உயரத்திற்கு கடல் அலை காணப்படும் என்றும் தமது தெற்கு கரையில் 1.2 மீற்றருக்கும் அதிக உயரத்திற்கு அலை தாக்கக்கூடும் என்றும் ஜப்பான் எதிர்வு கூறியுள்ளது.

வலுவான நீரோட்டங்கள், அதிகரித்த அலை மற்றும் கரையோரப் பகுதிகளில் வெள்ளம் என்பன குறித்து அமெரிக்காவும் எச்சரித்துள்ளது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட குறித்த எரிமலை வெடிப்பு காரணமாக டொங்காவில் சுனாமி தாக்கியுள்ளது.

மேலும் ஹங்கா டோங்கா-ஹுங்கா ஹாஅபாய் எரிமலையின் வெடிப்பு சத்தம் தென் பசிபிக் முழுவதும் உணரப்பட்டதோடு வெடிப்பின் சத்தம் இறுதியாக அமெரிக்கா வரையில் பதிவாகியுள்ளது.

அத்தோடு எரிமலை வெடிப்பு இடம்பெற்ற பகுதியிலிருந்து 65 கிலோமீற்றர் தொலைவில் உள்ள டொங்காவின் பல பகுதிகள் சாம்பலால் மூடப்பட்டுள்ளதோடு அங்கு மின்சாரம், தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன.

தற்போது மீண்டும் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் பெரிய அளவிலான சுனாமி அலைகள் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அதற்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here