ஜோகூர் பாரு, ஜனவரி 16 :
இன்று மாலை 4 மணி நிலவரப்படி, சிகாமாட்டில் உள்ள ஒரு வெள்ள நிவாரண மையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 70 பேர் மட்டுமே தங்கியுள்ளனர். இந்த எண்ணிக்கை இன்று காலை 77 பேராக இருந்தது.
ஜோகூர் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் ஆர்.வித்யானந்தன் இதுபற்றிக் கூறுகையில், ஏனையவர்கள் கம்போங் கெபாங்சான் கெமெரேயைச் சேர்ந்தவர்கள் செக்கோலா அகமா கெமெரேயில் உள்ள பிபிஎஸ்ஸில் தங்கியுள்ளனர்.
அவர்களது கிராமத்தில் வெள்ள நீர் (banjir termenung) தேங்கியுள்ளதால் அவர்களால் இன்னும் வீடு திரும்ப முடியவில்லை என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 9 மணி மற்றும் நண்பகல் 1 மணிக்கு முறையே இரு பிபிஎஸ்கள் மூடப்பட்டதன் மூலம் செகாமாட் மாவட்டத்தில் வெள்ள நிலைமை மேம்பட்டுள்ளதை அறியமுடியும் என்று அவர் கூறினார்.
ஆற்று நீர் இன்னும் எச்சரிக்கை மட்டத்தில் இருப்பதால், பத்து பஹாட்டில் உள்ள சுங்கை பெக்கோக், எம்பாங்கன் பெக்கோக் அருகே வசிக்கும் குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வித்யானந்தன் அறிவுறுத்தினார்.
இன்றைய வானிலையில், ஜோகூர் பாரு மேகமூட்டத்துடன் இருப்பதாகவும், மற்ற ஒன்பது மாவட்டங்களில் வானிலை நன்றாக இருப்பதாகவும் அவர் கூறினார்.









