வாகன விபத்து – 84 வயது முதியவர் பலி; மேலும் ஒருவருக்கு பலத்த காயம்

ஜோகூர் பாரு,  ஜாலான் பெர்மாஸ் பாராட்டில்  மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 84 வயது முதியவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். இன்று (ஜனவரி 16) காலை 11.40 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஜோகூர் பாரு தெற்கு துணை OCPD  லிம் ஜிட் ஹூய் தெரிவித்தார்.

பிளென்டாங்கில் இருந்து பெர்மாஸ் ஜெயா நோக்கிச் சென்ற ஜாலான் பெர்மாஸ் ஜெயா சந்திப்பு அருகே வாகனங்கள் மோதிக்கொண்டன என்று அவர் இங்கே ஒரு அறிக்கையில் தெரிவித்தார். விசாரணைக்கு உதவும் வகையில் சம்பவத்தின் சாட்சிகளை போலீசார் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.

சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் கவனக்குறைவாக அல்லது ஆபத்தான வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக வழக்கு விசாரிக்கப்படுகிறது. 37 வயதான அந்த நபர் தற்போது சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி கெல்லி லீயை 014-697 7122 என்ற எண்ணில் அழைக்கலாம்  என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here