காணாமல் போன நடிகை, சாக்கு மூட்டையில் சடலமாக கண்டெடுப்பு

வங்காள தேசத்தை சேர்ந்த பிரபல நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு, வயது 45. இவர் கடந்த 1998 முதல் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அதோடு பங்களாதேஷ் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் இணை உறுப்பினராகவும் இருந்தார்.

சில நாட்களுக்கு முன் ரைமா காணாமல் போனதால், அவரது உறவினர்கள் கெரனிகஞ்ச் மாடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து ஜனவரி 17-ஆம் தேதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில், சாக்கு மூட்டையில் இருந்த 45 வயதுடைய நபரின் சடலத்தை போலீஸார் மீட்டனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக டாக்காவில் உள்ள சர் சலிமுல்லா மருத்துவக் கல்லூரி பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அது ரைமாவின் உடல் தான் என உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து ரைமா இஸ்லாம் ஷிமுவுக்கு என்ன நடந்தது? அவரை யார் கொலை செய்து உடலை அப்புறப்படுத்தியது என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதையடுத்து வங்கதேச திரையுலகினரிடம், ரசிகர்களிடமும் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here