அடுத்த 7 நாட்களுக்கு எரிப்பொருள் விலையில் மாற்றமில்லை

இன்று நள்ளிரவு முதல் அடுத்த 7 நாட்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. RON97 இன் விலை லிட்டருக்கு RM3.07 ஆக உள்ளது. RON95 மற்றும் டீசல் இன்னும் லிட்டருக்கு RM2.05 மற்றும் RM2.15 ஆக உள்ளது.இந்த புதிய கட்டணம்  ஜனவரி 26ம் தேதி வரை அமலில் இருக்கும்.

உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் விளைவுகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க, அரசாங்கம் RON95 பெட்ரோலின் சில்லறை விலையை லிட்டருக்கு RM2.05 ஆகவும் டீசல் லிட்டருக்கு RM2.15 ஆகவும் பராமரித்து வருகிறது. இரண்டு பொருட்களின் உண்மையான சந்தை விலை உச்சவரம்பு விலையை விட உயர்ந்துள்ளது.

உலக கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்று நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here