கடை வீட்டில் ஏற்பட்ட தீயில் இசைக் கருவி சேமிப்பு கிடங்கு முற்றாக அழிந்தது

கோலாலம்பூர், ஜாலான் துன் டான் சியூ சின்  எண்.37  WOH FT MUSIC HOUSE SDN BHD ஏற்பட்ட தீயில் அக்கட்டடம் முழுமையாக சேதமடைந்தது. இந்த தீ சம்பவம் குறித்து கோலாலம்பூர் செயல்பாட்டு மையத்திற்கு மாலை 4.55 மணிக்கு அவசர அழைப்பு வந்ததை தொடர்ந்து  MERS999, அடுத்ததாக அந்த இடத்திற்கு 45 தீயணைப்பு வீரர்களுடன் 9 தீயணைப்பு வண்டிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தது.

மூத்த செயல்பாட்டுத் தளபதி TPgB II, Armdan Bin Mahat கூறுகையில் சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புப் படையினர் தீ பரவியதைக் கண்டுபிடித்தனர். கடைவீட்டின் கட்டிடத்தின் 1ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இசைக்கருவிகளை சேமிப்பதற்கான இடமாக அது இருந்து வந்துள்ளது. இந்த தீ சம்பவத்தில் உயிர் சேதம் ஏதுமில்லை. தீக்கான காரணத்தை விசாரித்து வருவதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here