நாடாளுமன்ற உறுப்பினரின் அண்ணன்மகன், முன்னாள் ஊழியர் மீது லஞ்சம் கேட்டதாக எம்ஏசிசி குற்றச்சாட்டு

சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா ராசையாவின் அண்ணன் மகன் உட்பட இருவர் மீது ஒரு நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஆட்சேர்ப்புக்காக லஞ்சம் கேட்டதாக இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009 இன் பிரிவு 16(A) இன் கீழ் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை நவீன் குலராசா ராசையா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் முன்னாள் ஊழியர் நிகோ காம் ஆகியோர் மறுத்து விசாரணை கோரினர்.

வழக்கின் அடுத்தக் குறிப்புக்கான தேதியை பிப்ரவரி 24 என்று நீதிபதி அசுரா அல்வி நிர்ணயித்தார். நவீன் மற்றும் நிகோ ஆகியோருக்கு தலா 10,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here