JPJ உறுப்பினர் மீது மோட்டார் சைக்கிளால் மோதிய ஓட்டுநர் கைது

போர்ட்டிக்சன்:

சிரம்பான் -போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையின் 28ஆவது கிலோமீட்டரில் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ ) அமலாக்க அதிகாரியை தாக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட 25 வயதுடைய சந்தேகநபருக்கு போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான முந்தைய 8 பதிவுகளை கொண்டவர் என்று போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறை தலைவர் அய்டி ஷாம் முஹமட் தெரிவித்தார்.

“சந்தேக நபரிடம் ஓட்டுநர் உரிமம் மற்றும் காலாவதியான சாலை வரி இல்லை என்பதும் கண்டறியப்பட்டது என்றும், சந்தேகநபர் நாளை போர்ட்டிக்சன் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார் என்றும் கூறினார்.

“பலத்தை பயன்படுத்தி அரசு ஊழியர்களை மிரட்டியதற்காக குற்றவியல் சட்டத்தின் 353வது பிரிவின் கீழ்” இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார் அவர்.

முன்னதாக, இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று இன்று மதியம் முதல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

JPJ அமலாக்கப் பிரிவினர் சாலை மறியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், சந்தேக நபர் தப்பிச் செல்ல எண்ணி திடீரென மோட்டார் சைக்கிளை வேகமாகச் ஒட்டியதுடன், JPJ உறுப்பினரைத் தாக்கியதாகவும் அவர் கூறினார்.

இதனால் குறித்த “JPJ உறுப்பினர் கால்கள் மற்றும் கைகளில் சிறிய காயமடைந்ததாகவும், அவர் சிகிச்சைக்காக போர்ட்டிக்சன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், அவர்கள் வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here