மீண்டும் வெள்ளத்தில் தத்தளிக்கும் தாமான் ஸ்ரீ மூடா!

ஷா ஆலம், ஜனவரி 24:

இன்று நண்பகல் சுமார் 3 மணியளவில் பெய்த கன மழையைத் தொடர்ந்து, தாமான் ஸ்ரீ மூடா, பிரிவு 25 இல் உள்ள பல பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கின.

ஏற்கனவே ஏற்பட்ட வெள்ளத்தினால் அடைபட்டிருந்த வடிகால்களால், மழைநீர் சீராக செல்ல முடியாமல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாக தெரியவந்துள்ளது.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) இயக்குநர் நோரஸாம் காமிஸ் கூறியதாவது: ஷா ஆலம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) குழுவினர் நடத்திய ஆய்வின்போது, ​​அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் உள்ள கழிவுநீர் குளத்தின் அருகே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது கண்டறியப்பட்டது.

“சாலையில் இன்னும் வாகனங்கள் செல்லக்கூடியதாக உள்ளது என்றும் வடிகால் அடைக்கப்பட்டதால் தண்ணீர் நிரம்பி வழிகிறது என்றும் கூறினார்.

மேலும் இன்று அவரைத் தொடர்பு கொண்டபோது, ​​“தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளதாகவும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக, தாமான் ஸ்ரீ மூடா பகுதியில் உள்ள ஒரு சாலையில் தண்ணீர் பெருகுவதையும், அது இன்னும் வாகனங்கள் செல்லக்கூடியதாக இருந்தாகவும் டூவிட்டர் வலைத்தளத்தில் ஒருவர் பதிவிட்டிருந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிரப்பட்டிருந்ததுகுறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here